மிஷன் வந்தே பாரத் : கோலாலம்பூர் முதல் தமிழகம் வரை – விமான விவரத்தை வெளியிட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.!

Vande Bharath Flights
Image tweeted by Air India Express

வுஹான், தற்போது உலக மக்கள் தங்கள் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நகரித்தின் பெயர் என்றால் அது மிகையல்ல.

ஒற்றை தொற்றாக உருவெடுத்த அந்த வைரஸ் இன்று உலக அளவில் பிறவி உள்ளது என்றால் இன்னும் உலகம் விஞ்ஞானத்தின் உச்சத்தை அடையவில்லை என்றே சொல்லலம்.

பலர் இதை வேண்டும் என்றே பரப்பப்பட்ட நோய் என்றும் கூறிவருகின்றனர்.

சிலர் 100 வருடங்களுக்கு ஒரு முறை பூமி தன்னை சுத்தம் செய்ய இயற்கை எடுத்த நடவடிக்கை என்று கூறுகின்றனர்.

ஆனால் ஆதாரம் இல்லாமல் இந்த பூவுலம் நம்பாது என்பதே நிதர்சனம்.

இதையும் படிங்க : “1 லட்சம் மலேசியர்கள் வேலை இழக்கும் அபாயம்” – சிங்கப்பூருக்கு கோரிக்கை விடுத்த ஜோகூர் அரசு.!

பல கோடி மக்களை வாட்டிவதைக்கும் இந்த நோய்க்கு இன்னும் மருந்து கண்டறியப்படாத நிலையில் 6 மாத பூட்டுதலுக்கு பிறகு மக்கள் வாழ வழியின்றி தற்காப்புடன் மீண்டும் தங்களது பணிகளை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

மலேஷியா மற்றும் இன்றி அண்டை நாடான இந்தியாவிலும் தற்போது ஊரடங்கு பல தளர்வுகளுடன் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்த மாதத்திற்கான இந்தியாவின் வந்தே பாரத் திட்டம் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் மாதம் 1ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை மலேசியாவில் இருந் இந்தியாவிற்கு வந்தே பாரத் விமானங்கள் பிறக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அடுத்த மாதம் திருச்சி மற்றும் சென்னை ஆகிய நகரங்களுக்கு 7 விமானங்களை இயக்க உள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ். கோலாலம்பூரில் இருந்து இந்தியா முழுவதும் 20 விமானங்கள் இயங்க உள்ளன.

டிக்கெட் பெறுதல் மற்றும் பயண விவரம் குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

*  Facebook

* Telegram