“NPRA அங்கீகரிக்கும் அடுத்த தடுப்பூசியை முதலில் நான் ஏற்றுக்கொள்கிறேன்” – அமைச்சர் ஜமாலுதீன்

Minister Khairy Jamaluddin
Image Tweeted by Minister Khairy Jamaluddin

மக்களுக்கு தடுப்பூசிகள் மீது உள்ள பயத்தை போக்க NPRA அங்கீகரிக்கும் அடுத்த தடுப்பூசியை தான் முதலில் எடுத்துக்கொள்ளவிருப்பதாக ஜமாலுதீன் தெரிவித்துள்ளார். (Minister Khairy Jamaluddin)

மலேசியாவின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சர் திரு. கஹேரி ஜமாலுதீன் இந்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். (Minister Khairy Jamaluddin)

“தமிழ் பள்ளிக்கு நிரந்திர நிலப்பட்டா வழங்காதது ஏன்.?” – பேராசிரியர் ராமசாமி.!

மலேசியாவை பொறுத்தவரை தடுப்பூசிகள் பெறுவதற்கு முன்பு பல கட்ட சோதனைகள் மேற்கொண்டு, அதன் பின்னரே மக்களுக்கு அளிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

தடுப்பூசிகள் குறித்து அந்த அந்த நிறுவனங்களிடம் பலதரப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு, அதன் பின்பு சோதனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் National Pharmaceutical Regulatory Agency (NPRA) அங்கீகரிக்கும் அடுத்த கொரோனா தடுப்பு மருந்தினை தான் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.

இதனால் மக்களுக்கும் தடுப்பூசிகள் மீது உள்ள நம்பிக்கை அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி 21ம் தேதி ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளில் இருந்து கொரோனா தடுப்பு மருந்துகள் பெறப்பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த 25ம் தேதி முதல் தடுப்பூசியை மலேசிய பிரதமர் முஹிதீன் யாசின் பெற்றுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து தடுப்பூசி வழங்கும் பணியில், முதற்கட்டமாக 5,71,802 முன்களப் பணியாளர்களுக்கு வழங்க பட்டியல் தயார் செய்யப்பட்டது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram