மலேசியாவில் விமர்சையாக கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா

MGR

புகழ் பெற்ற தமிழ் நடிகர்களில் என்றுமே முதன்மையானவர், மக்கள் திலகம் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் நடிகராக மட்டும் இல்லாமல் தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த ஜனவரி 17ம் தேதி அவரது 103வது பிறந்த நாள் உலகம் முழுதும் உள்ள அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

அதே போல மலேசியாவிலும் அவரது பிறந்த நாள் கொண்டப்பட்டது. இதற்காக தமிழ் நாட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் மலேசியா வந்து எம்.ஜி.ஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார்.

தேசிய வகை பத்துமலை என்னும் மலேசியாவில் இயங்கி வரும் தமிழ் பள்ளியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்வு முடிந்த பின்னர் அந்த பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு 1000 ரிங்கட் உதவியை தொகையினை ஆர்.வி ரஞ்சித்குமார் வழங்கினார். அவரின் கனிவான உள்ளதை அந்த பள்ளி ஆசிரியர் வெகுவாக பாராட்டினார்.

மேலும் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு அந்த பள்ளியில் பயிலும் அணைத்து மாணவர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி சாரதா பொன்னுசாமி கலந்துகொண்டு சிறப்பித்தார்.