மலேசியாவிற்கு உதவு சீனாவில் இருந்து வரும் மருத்துவ அதிகாரிகள் – நூர் ஹிஷாம் அப்துல்லா

noor hisham abdullah

மலேசியாவில் பரவி வரும் கொரோனா தொற்றை கையாள்வதில் மலேஷியா மருத்துவ அதிகாரிகளுக்கு உதவ சீனாவில் இருந்து மருத்துவ அதிகாரிகள் மலேசியா வரவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகத்தில் இயக்குனர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். கோவிட் -19 பரவலை கையாள்வதில், மலேசியாவின் மருத்துவமனைகளின் செயல்திறனையும் சீன மருத்துவ குழு ஆராயும் என்றும் சுகாதார இயக்குநர் ஜெனரல் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) புத்ராஜெயாவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இதனை அவர் கூறினார், “ஏற்கனவே அவர்கள் இந்த கோவிட் -19-ஐ கையாண்டிருப்பதால் அவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொள்ள வருகின்றனர்”, என்று அவர் தெரிவித்தார்.

தங்கள் நாட்டில் திறன்பட அவர்கள் செயல்பட்டிருப்பதால், அந்த மருத்துவ குழுவினர் தரும் யோசனைகளை நிச்சயம் மலேசியாவிற்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் வைரஸ் குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதில் சீன மருத்துவக் குழுவின் ஒத்துழைப்பை அமைச்சகம் எதிர்பார்க்கிறது என்றும் அவர் கூறினார். மலேசியாவில் தற்போது நிலைமை கட்டுக்குள் இருந்தாலும் இன்னும் சில நாட்களுக்கு ஊரடங்கு அவசியம் என்பதால் வரும் ஏப்ரல் 28ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.