“தலைநகர் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் தடை நீடிக்கும்” – பாதுகாப்பு அமைச்சர்.!

MCO Extended KL
Image tweeted by Ismail Sabri Yakob

தலைநகர் கோலாலம்பூர், சபா மற்றும் சிலாங்கூர் ஆகிய பகுதிகளில் நடமாடக்கட்டுப்பாடு எனப்படும் MCO இந்த மாத இறுதி வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (MCO Extended KL)

இன்று டிசம்பர் 20ம் தேதியுடன் பல மாநிலங்களில் MCO எனப்படும் நடமாட்டக்கட்டுப்பாடு முடிவடைய உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. (MCO Extended KL)

“மீண்டும் முன்னிலையில் சிலாங்கூர்” – குறையும் இறப்பு எண்ணிக்கை.!

நாட்டில் சில மாநிலங்களில் மட்டும் தொற்றின் அளவு என்பது இன்னும் உச்சத்தில் இருப்பதால் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிக்கை மலேசிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கோப் அவர்களால் வெளியிடப்பட்டது.

மேலும் மேற்குறிப்பிட்ட மூன்று மாநிலங்கள் இல்லாமல் நெகிரி செம்பிலான் பகுதியில் உள்ள சிரம்பான் மற்றும் போர்ட்டிக்சன் மாவட்டங்கள்.

அதனோடு ஜொகூரில் உள்ள ஜோகூர் பாரு, கூலாய் மற்றும் பத்து பகாட் ஆகிய மாவட்டங்களிலும் இந்த MCO இம்மாத இறுதி வரை அமலில் இருக்கும்.

ஆரம்ப நிலையில் மலேசியாவில் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் தொற்றே இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த சில வாரங்களாக தொற்றின் அளவு 1000-க்கும் அதிகமாகவே பதிவாகி வருவது பலரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதே சமயம் கொரோனா காரணமாக ஏற்கனவே மலேசியாவில் 400-க்கும் அதிகமானோர் இறந்துள்ள நிலையில் தற்போது இறப்பு விகிதம் குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆசிய நாடுகள் பலவற்றுள் தற்போது கொரோனா குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram