மலேசியா : “விமான நிறுவனங்கள் பணத்தை திருப்பித் தர வேண்டும்..?” – MATTA

MATTA

மலேசியாவில் கொரோனா தொற்றுநோயின் விளைவாக பல போக்குவரத்து சேவைகள் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக முடங்கியுள்ளது. இந்நிலையில் மலேசியாவில் விமான சேவை ரத்து செய்யப்பட்டதிலிருந்து பல பயணிகள் மற்றும் பயண முகவர்கள் தாங்கள் முன்பதிவு செய்த பயணங்களுக்கான பணத்தைத் திரும்பப் பெறவில்லை என்று மலேசிய சுற்றுலா மற்றும் பயண முகவர்கள் சங்கம் (MATTA) (Malaysian Association of Tour and Travel Agents) தெரிவித்துள்ளது.

இது குறித்து விமானப் போக்குவரத்து துணைத் தலைவர் ஷாஸ்லி அஃபுவத் கசாலி பேசுகையில், “விமான நிறுவனங்கள் தங்களின் தலையாய கடமையாக முதலில் மக்களுக்கு திருப்பி தரவேண்டிய பணத்தை தரவேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் விமான நிறுவனங்கள் பணத்திற்கு பதிலாக “கடன் குறிப்புகளை” மக்களுக்கு வழங்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் அசாதாரண சூழலில் விமான சேவை நிறுவனங்களும் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மலிண்டோ ஏர் நிறுவனம் தனது பணியாளர்கள் பலருக்கு ஊதியமில்லா விடுமுறை அளித்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் MATTA-வின் இந்த அறிவிப்பு விமான சேவை நிறுவனங்களுக்கு மேலும் இக்கட்டான சூழலை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.