“எங்கள் வாழ்விற்கு வழி சொல்லுங்கள்” – மலேசிய திருமண ஏற்பாட்டாளர்கள் சங்கம்.!

Marriage Assemblers
Twitter Image

பொதுமுடக்கத்தால் தங்களுடைய பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மலேசிய திருமண ஏற்பாட்டாளர்கள் சங்க தலைவர் ஸரினா மொஹிடின் தெரிவித்துள்ளார். (Marriage Assemblers)

உலக அளவில் இந்த கொரோனா காரணமாக சிறு, குறு முதல் பெரிய தொழில் செய்யும் அனைவரும் பெருமானளவு பாதிக்கப்பட்டுள்ளனர். (Marriage Assemblers)

“இது கல்வி அமைச்சகத்தின் முடிவுக்கு விழுந்த பலத்த அடி” – முன்னாள் கல்வி அமைச்சர்.!

இந்நிலையியல் மலேசியாவில் பொது முடக்கத்தால் தங்களுடைய வேலை பாதித்துள்ளதாக திருமண ஏற்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று இதற்காக புத்ர ஜெயாவின் டத்தாரான் புத்ரா என்ற இடத்தில் பலர் ஒன்றுகூடி தங்களுடைய கோரிக்கையை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்வில் திருமண ஏற்பாட்டாளர்கள், சமையல்காரர்கள், மண்டப உரிமையாளர்கள், ஒப்பனை கலைஞர்கள் என்று பலர் ஒன்றுகூடினர்.

சில தினங்களுக்கு முன்பு மலேசியாவில் 4 இடங்களில் மார்ச் 4ம் தேதி வரை நடமாடக்கட்டுப்பாட்டை நீடிக்க முடிவெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை மலேசியாவின் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கோப் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில் சரவாக் போன்ற பகுதிகளில் மேலும் 10 நாட்களுக்கு (மார்ச் 14 வரை) பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கிவிட்டாலும், பொதுமுடக்கம் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

இதனால் பல சிறுதொழில் செய்து அன்றாட வாழ்க்கையை நகர்த்தும் பலர் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram