அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட ‘புதிய’ பட்டியல் – மலேசியாவுக்கு எந்த இடம் ?

malaysia country
Kuala lumpur cityscape. Panoramic view of Kuala Lumpur city skyline during sunrise viewing skyscrapers building and in Malaysia. (Kuala lumpur cityscape. Panoramic view of Kuala Lumpur city skyline during sunrise viewing skyscrapers building and in Ma

இயற்கைவளம், சுற்றுச்சூழல் , தூய்மையான காற்று, நல்ல குடிநீர், அமைதியான சூழ்நிலை என்று இவையே ஒரு நாட்டில் மனிதன் வாழ்ந்திட அடிப்படை விஷயம். கல்வி,பொருளாதாரம், அறிவியல், இயந்திரம் என்று பல நூறு விஷயங்கள் இருந்தாலும் இயற்கை தரும் வளங்களே எப்பொதும் நிலைத்துநிற்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இருப்பினும் முழுதும் இயந்திரமாய் மாறிவிட்ட இந்த காலகட்டதில் உச்சம் தொடும் விஞ்ஞானமே பெரிதாய் பார்க்கபடுகிறது.

இந்நிலையில் பிறந்திருக்கும் இந்த 2020ம் ஆண்டில் கல்வி, பாதுகாப்பு, பொருளாதாரம், அறிவியல் உளிட்ட பல விஷயங்களை கொண்டு உலக நாடுகளை பட்டியலிட்டு உள்ளது அமரிக்க செய்தி மற்றும் உலக அறிக்கை என்ற பத்திரிக்கை நிறுவனம்.

இந்த அறிக்கையில் இயற்கையான சூழலில் மக்கள் வாழகூடிய நாடக முதல் முன்று இடத்தில் முறையே ஸ்வீடன், சுவிட்சர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. பாதுகாப்பு மற்றும் பலம் பொருந்திய நாடுகளில் வழக்கம் போல முதலிடம் அமெரிக்காவுக்கே இரண்டு மற்றும் முன்றாம் இடங்களில் நாம் கணித்தது போலவே முறையே ரஷ்யாவும் சீனாவும் உள்ளது. கல்வியில் சிறந்த நாடுகளாக முதல் முன்று இடத்தில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா உள்ளது.

தொழில் தொடங்க ஏற்ற நாடு என்ற பட்டியலில் மலேசியாவை பின்னுக்கு தள்ளி முதலிடல் உள்ளது தாய்லாந்து, இரண்டில் மலேசியாவும் முன்றாம் இடத்தில் சீனாவும் உள்ளது. பெண்களுக்கு உரிய நாடக முதலிடத்தில் டென்மார்க், இரண்டாம் நிலையில் சுவீடன் மற்றும் முன்றில் நெதர்லாந்து உள்ளது.