“நாடு திரும்பும் மலேசியர்கள் இனி NADMA-வில் பதிவு செய்ய வேண்டும்” – மூத்த அமைச்சர்..!

NADMA
Picture Courtesy Bernama

நோய் தொற்றின் பரவலை முற்றிலும் ஒழிக்க பல நாடுகளும் தங்களால் ஆனா அனைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றனர். இந்நிலையில் பிற நாடுகளில் இருந்து மலேசியா திரும்புவோர் மலேசியா வந்து இறங்கும்போது அவர்களுக்கு நோய் தொற்று இல்லை என்று உறுதியாகும் நிலையில் அவர்களது வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் பலர் அதை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும், அவ்வாறு தனிமைப்படுத்திக்கொள்ளாதவர்களால் நோய் தொற்றும் பரவிய நிலையில் மலேஷியா திரும்பும் அனைவரும் அரசு விடுதியில் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் அவ்வாறு பிறநாடுகளில் இருந்து மலேசியா திரும்புபவர்கள் அரசு அறிவித்த நிலையங்களில் தனிப்படுத்திக்கொள்ள, அதற்கான பதிவுகளை மேற்கொள்ள மிகவும் காலதாமதம் ஏற்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இந்த காலதாமதத்தை போக்க அரசு தற்போது புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

இதையும் படிங்க : “இந்தியாவோடு நல்ல நட்புறவில் உள்ளோம்” – மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர்..!

“NADMA” என்ற இணையத்தில் பிற நாடுகளில் இருந்து மலேசியா திரும்பும் மலேசியர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு பதிவு செய்வதால் அவர்கள் மலேசியா வந்த பிறகு 14 நாட்கள் அரசு விடுதியில் தனிமைப்படுத்த ஆவணங்களை சமர்ப்பிக்கும்போது அந்த வேலை சுலபமாக வழிவகுக்கும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. விரைவில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சபரி யாகூப் தெரிவித்துள்ளார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms