சவூதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் மலேசியர்கள் – விரைவில் தாயகம் அழைத்துவர முடிவு

saudi arabia

கொரோனா வைரஸ் பரவுதலை தொடர்ந்து கணித்து worldometers.info என்ற இணையதளம் ஒன்று தினமும் அறிக்கை வெளியிட்டு வருகின்றது . இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இதுவரை இந்த நோயின் காரணமாக உலக அளவில் சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். இந்த நோய் தாக்கி இதுவரை உலக அளவில் சுமார் 25,000-க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சுமார் 1,51,809 பேர் இந்த கொரோனா நோயில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மலேசிய மக்கள் சிலர் இன்னமும் வெளிநாடுகளில் சிக்கி தவித்து வருகின்றனர். தற்போது சவூதி அரேபியா நாட்டில் சிக்கி தவிக்கும் மலேசிய மக்களை தாயகம் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ரியாத்தில் உள்ள மலேசிய தூதரகம் மற்றும் சவுதி ஏர்லைன்ஸ் ஆகியவற்றின் முயற்சியால் தற்போது அங்கு இருக்கும் மலேசியர்களை மலேஷியா அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதுவரை மலேசியாவில் 2470 பேர் இந்த நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் கொரோனா காரணமாக 35 பேர் இறந்துள்ளனர். மேலும் புதிதாக யாரும் இன்று பாதிக்கப்படவில்லை என்று worldometers.info என்ற இணையதளம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.