COVID – 19 : டெல்லி தப்லீக் சமய நிகழ்வில் பங்கேற்ற மலேசியர்கள் – தடுத்து வைத்த இந்தியா

chennai immigration

தற்போது உலகம் முழுதும் கொரோனா நோயின் காரணமாக ஒரு அசாதாரண சூழல் நிலவி வருகின்றது. மலேசியாவின் அண்டை நாடான இந்தியாவிலும் 3500-க்கும் அதிகமான மக்கள் இந்த கொரோனா நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் அந்நாட்டின் தலைநகர் டெல்லியில் நடந்த ஒரு மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே போல இந்த மாநாட்டில் பங்கேற்ற இந்தியாவில் உள்ள தமிழ் நாட்டிலும் 200-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் நேற்று இந்தியாவில் இயங்கி வரும் தி ஹிந்து என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் “ஏப்ரல் 5 ம் தேதி இந்தியாவில் உள்ள சென்னை சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகள் சுற்றுலா விசாவில் இந்தியா வந்து, டெல்லியில் நடந்த தப்லிகி ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்ட 10 மலேசிய பிரஜைகளை தடுத்து வைத்தனர். பின்னர் அவர்கள் மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்”, என்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டுள்ள அந்த டெல்லியில் நடந்த மாநாட்டில் சில மலேசியர்களும் கலந்துகொண்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. தற்போது அந்த, மலேசியர்கள் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.