சிங்கப்பூருக்குள் நுழைய மலேசியர்களுக்கு தடை – குடிவரவு இயக்குநர் ஜெனரல்

Khairul Dzaimee Daud

தினம்தோறும் வேலைநிமிர்தமாக மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் வந்துசெல்லும் பயணிகள் நேற்று முதல் வருகின்ற மார்ச் 31ம் தேதி வரை அவ்வாறு வந்துசெல்ல முடியாது என்று என்று குடிவரவு இயக்குநர் ஜெனரல் கைருல் டிசைமி டாவூட் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். புதிதாக பதவி ஏற்ற மலேஷியா பிரதமர் திரு. முகிதீன் யாசின் அண்மையில் விதித்த கட்டுப்பட்டால் மலேசியர்கள் யாரும் பிற நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல மலேசியர்கள் யாரும் மார்ச் 31ம் தேதி வரை சிங்கப்பூர் செல்லக்கூடாது என்ற தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

பிற நாடுகளில் இருந்து மக்கள் மலேசிய நாட்டிற்குள் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது, அதே போல வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பும் மலேசியர்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளித்த பின்னரே நாட்டிற்குள் அனுபாதிக்கப்படுவார்கள் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீர், மின்சாரம், எரிசக்தி, தொலைத்தொடர்பு, போன்ற பல அத்தியாவசிய தேவைகளும் சில சில்லறை தொழில் மற்றும் தினசரி உணவிற்கான பொருட்களை வழங்கும் நிறுவனங்களை தவிர அனைத்து நிறுவனங்களும் தற்காலிகமாக மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.