மலேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் – அரசு தந்த “இனிப்பான” அறிவிப்பு

malaysian toll

உலகம் முழுதும் மக்களின் பயன்பாட்டிற்காக நெடுஞ்சாலைகள் அமைப்பது வழக்கம். அவ்வாறு அமைக்கப்படும் நெடுஞ்சாலைகளை பராமரிக்க சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு அதை கடந்து செல்லும் மக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் நாளடைவில் காலம் செல்ல செல்ல வசூலிக்கப்படும் கட்டணம் குறைக்கப்படும்.

இந்நிலையில் மலேசியாவில் உள்ள நெடுஞ்சாலைகளில் இருக்கின்ற PLUS மலேசியா என்ற சுங்கசாவடிகளில் கட்டணத்தை குறைக்கவிருப்பதாக மலேசிய பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிகின்றன.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அடுத்த மாதம் முதல் தேதியில் இருந்து மலேசியாவில் உள்ள சில சுங்கசாவடிகளில் தனியார் வாகனங்களுக்கான கட்டணம் பதினெட்டு விழுக்காடு குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சுங்கசாவடிகளில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பதினெட்டு விழுக்காடு கட்டண குறைவு என்பது அடுத்து வரும் 2058ம் ஆண்டு வரை நீடிக்கும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் மலேசிய – சிங்கப்பூர் இரண்டாவது பாலம், வடக்கு – தெற்கு விரைவுச்சாலை மற்றும் வடக்கு – தெற்கு விரைவுச்சாலை சென்ட்ரல் லிங்க், போர்ட் டிக்சன் – சிரம்பான் நெடுஞ்சாலை உள்ளிட்ட சில இடங்களில் உள்ள சுங்கச்சவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் குறைக்கபடுகிறது.

கடந்த ஜனவரி 15ம் தேதி அமைச்சரவை சந்திப்பில் நடத்தப்பட்ட ஆலோசனை கூடத்தில், நெடுஞ்சாலையில் உள்ள சுங்கசாவடிகளின் கட்டணத்தை குறைபதர்கான முடிவு எடுகபட்டதாக மலேசிய பிரதமர் அலுவலக செய்தி தொடர்பு தெரிவித்துள்ளது.