கொரோனா – தாயகம் திரும்பும் மலேசியர்களுக்கு, உரிய சிகிச்சை அளிக்கப்படும்

Mahathir

விஸ்வருபம் எடுத்துள்ள கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருவதால் வுஹன் மற்றும் சீனாவின் பிற பகுதிகளில் வசிக்கும் தங்கள் நாடு மக்களை அந்த, அந்த நாடுகள் திருப்பி அழைத்து வருகின்றன. வுஹனில் வசித்து வந்த சுமார் 206 நபர்களை ஜப்பான் தனி விமானம் மூலம் கடந்த ஜனவரி 30 தேதி அழைத்துக்கொண்டது, இதே போல பிற நாடுகளும் செய்து வருகின்றன.

தற்போது பிஜிங்கிள் உள்ள மலேசியா தூதரகம் வுஹனில் உள்ள மலேசியர்களை மீட்க புறப்பட்டுள்ளது, மேலும் இது குறித்து கடந்த வியாழன் அன்று அறிக்கை வெளியிட்ட மலேசியா பிரதமர் மகாதீர், சீனாவில் உள்ள மலேசியர்களை தாயகம் அழைத்துவர சீனா அரசுடன் பேசிவருவதாகவும் அவர்களை தாயகம் அழைத்து வந்ததும் அவர்கள் அனைவரும் சுமார் 14 நாட்கள் தனிமைபடுதப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நடந்து முடிந்த அமைச்சரவை கூட்டதில், இது தொடர்பாக முடிவு எடுகப்பட்டடுள்ளது என்றும், நாடு திரும்பியதும் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு, கொரோனா நோய் தொற்று இல்லை என்று நூறு சதவிகிதம் உறுதியான பின்னரே அவர்கள் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கபடுவார்கள் என்றும் பிரதமர் கூறினார்.