வுஹன் சென்ற மருத்துவ குழு – நாளை தாயகம் திரும்பும் மலேசியர்கள்

kula lampur

வுஹன் நகரில் சிக்கி தவிக்கும் மலேசியா மக்களை தாயகம் அழைத்துவர பல முயற்சிகள் அண்மைக்காலமாக எடுக்கப்பட்டது வந்தது. இந்நிலையில் நேற்று சீனாவின் பிஜிங்கிள் உள்ள மலேசியா தூதரகம், மருத்துவக்குழு ஒன்றை வுஹான் நகருக்கு அனுப்பி அங்குள்ள மலேசியர்களை அழைத்துவர முடிவு செய்தது. அதன் அடிப்படையில் ஒரு மருத்துவக்குழுவும் அங்கு சென்றது.

இதனையடுத்து நாளை வுஹன் நகரில் உள்ள மலேசிய மக்கள் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள வெளியாகி உள்ளன. சுமார் 141 மலேசியர்கள் கொரோனா தொற்று அதிகம் காணப்படும் வுஹன் நகரில் இருப்பதாகவும் அவர்களை தனி விமானம் மூலம் தாயகம் அழைத்துவர உள்ளதாகவும் தூதரக அதிகாரிகள் தெரிவிகின்றனர்.

மேலும் பேசிய அவர், வுஹன் சென்றுள்ள மலேசிய தூதரக அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினருக்கு அந்நாட்டு அரசு நல்லமுறையில் உதவி வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்வு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சீனாவில் இருக்கும் மலேசியா தூதர் ராஜா தடுக் நுஷிர்வான், நாங்கள் அனுப்பிய குழு பிஜிங்கிள் இருந்து புறப்பட்டு சாலை மார்கமாக வுஹன் நகருக்கு சுமார் 1,720 கிலோமீட்டர் பயணித்து காலை 3.50 மணியளவில் வுஹன் நகரை சென்றடைந்ததாகவும் கூறினார்.

மலேசியாவின் மத்திய பேரழிவு பாதுகாப்பு துரையின் அதிகாரி டாக்டர். வான் அழிஜாஹ் பேசுகையில் வுஹன் நகரிக் இருந்து வரும் மலேசியர்கள் 12 பேர் கொண்ட குழு அடங்கிய ஏர் ஏசியா விமானம் மூலம் தாயகம் அழைத்துவர உள்ளதாக தெரிவித்தார்.