பயணி தவறவிட்ட பணப்பை – திரும்ப ஒப்படைக்க 200கீ.மி பயணம் செய்த – “நேர்மையின் இலக்கணம்”

மலேசிய நாட்டில் கிராப் ஓட்டுநர் ஒருவர் செய்த செயல் தற்போது இணைய கவனத்தை ஈர்த்துவருகிறது. ஒரு பயணி தனது வாகனத்தில் தவறி விட்டு சென்ற வால்ட் எனப்படும் பணப்பையை சுமார் 200 கிலோமீட்டர் பயணம் செய்து, உரியவரிடம் ஒப்படைத்துள்ளார் ஒரு ஓட்டுநர். கடந்த ஜனவரி 4ம் தேதி ஜொகூர் சென்ற கார்னி மேக், அன்று இரவு கிராப் காரில் பயணம் செய்துள்ளார். பயணம் முடிந்து இறங்கும்போது அவர் மறதியாக தனது பணப்பையை வண்டியிலேயே மறந்து வைத்துவிட்டார்.

இதனை தொடர்ந்து அவர் பயணம் செய்த வாகனத்தை இயக்கி வந்த சதீஷ் என்னும் 39 வயது ஓட்டுநர், மீண்டும் ஜொகூர் பாருவுக்குச் சென்றார். சென்ற நாள் இரவு பயணி கார்னி மேக் விட்டுச்சென்ற வாலட்டை காரில் அவர் கண்டார். அந்த பணப்பையில் சுமார் 250 டாலர் ரொக்கம் இருப்பதையும் அவர் அறிந்தார், இதனை அடுத்து அந்த வாலட்டை அதன் உரிமையாளர் கார்னி மேக்கிடம் ஒப்படைக்க அவர் சென்றுள்ளார்.

ஓட்டுநர் திரு. சதீஸ் அந்த பணப்பையை ஒப்படைக்க மலாக்காவில் இருந்து ஜொகூர் பாரு வந்துள்ளார். அதன் பிறகு வாலட்டை பத்திரமாகப் பெற்றுக்கொண்ட மாக், எல்லாம் சரியாக இருந்ததாகக் கூறினார். மேலும், இந்த உயரிய செயலை பாராட்டும் விதமாக கார்னி மேக், கருப்புசாமியுடன் ஒரு செல்ஃபி எடுத்து அதை முழு விவரத்துடன் Johor Bahru Traffic, Crime & Community Service Report என்ற முகநூல் குழுவில் பகிர்ந்துள்ளார்.

தற்போது இந்த நேர்மைமிகு மிகு ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.