போதைப்பொருள் கடத்தல் : சிங்கப்பூரில் கைதான இளம் வயது மலேசிய பெண்கள்

singapore

துவாஸ் சோதனைச் சாவடியில் கடந்த புதன்கிழமை 3 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவை காரில் மறைத்து வைத்து கொண்டு சென்ற இரண்டு மலேசிய பெண்கள் அங்கிருந்த சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அதிகாலை சுமார் 4.40 மணியளவில் நடந்ததாக குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) மற்றும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பணியகம் (CNB) தனது செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளன.

மலேசிய பதிவு எண் கொண்ட அந்த காரில் ICA அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர், ​​அப்போது வாகனத்தின் பின்புற இருக்கையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கிலோவிற்கு அதிகமான கஞ்சாவை கண்டுபிடித்தனர். இந்நிலையில் இந்த கடத்தலில் ஈடுபட்ட 22 மற்றும் 23 வயதுடைய இரண்டு மலேசிய பெண்களை அதிகாரிகள் உடனடியாக கைது செய்தனர்.

தற்போது இந்த வழக்கு CNB அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது என்று ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இதனை தொடர்ந்து CNB அதிகாரிகள் நடத்திய கூடுதல் சோதனையில், காரில் மேலும் 1 கிலோ கஞ்சாவைக் கண்டுபிடித்தனர். பிடிபட்ட கஞ்சாவின் மொத்த மதிப்பு சுமார் S$30,000 என்று அதிகாரிகள் கூறுவதாக CNA செய்தி நிறுவனம் தங்கள் வெளியிட்டுள்ளது