நாடு திரும்பும் மலேசியர்கள் : 25 நாட்களில் 47 பேருக்கு தொற்று – விழிப்புடன் இருக்கும் மலேசிய அரசு..!!

Kuala Lampur Airport
Photo Courtesy : thesundaily.my

மீட்பு நடவடிக்கையாக பல நாடுகளில் சிக்கித்தவிக்கும் மலேசியர்களை மலேசியா அரசு தாயகம் அழைத்து வருகின்றது. அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புபவர்களில் கடந்த ஜூன் 10ம் முதல் நேற்று வரை சுமார் 47 பேருக்கு கோவிட் 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர் பன்னாட்டு விமானநிலையம் மூலம் நாட்டிற்குள் வருபவர்கள் அனைவரும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்றும். சுமார் 10,200 பேர் சோதனை செய்யப்பட்டு தற்போது அவரவர் வீட்டில் தனிமை படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் நேற்று தாயக திரும்பிய 1,171 பேருக்கு சோதனை செய்யப்பட்டதாகவும் அதில் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

மலேசியா இந்த நோய் தொற்றுக்கு எதிராக சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றது என்றும். மக்கள் அனைவரும் தொடர்ந்து ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.