வுஹனில் தவிக்கும் மலேசியர்கள் – மீட்க புறப்பட்டது மருத்துவ குழு

rescue team

உலகத்தில் சீனா, இந்தியா, மலேசியா உள்ளிட்ட இருபதிற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது கொரோனா எனப்படும் நோய் தொற்று. உலகின் உள்ள நாடுகள், சீனாவின் வுஹன் மற்றும் பிற மாகாணங்களில் வசிக்கும் தங்களது மக்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அண்டை நாடான இந்தியா தனி விமானம் மூலம் தங்கள் நாட்டு மக்களை வுஹனில் இருந்து கடந்த வாரம் தாயகத்திற்கு அழைத்து வந்தது. தற்போது அவர்கள் தனிமை படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

இந்நிலையில் சீனாவில் சிக்கி தவிக்கும் சுமார் 120 மலேசியர்களை காக்க பிஜிங்கிள் உள்ள மலேசிய தூதரகம் தனி குழுவை தற்போது வுஹன் அனுபியுள்ளது. வுஹனில் சிக்கி தவிக்கும் தங்களது உறவுகளை மீட்க்க கோரி பலர் அரசை நாடிய நிலையில் தற்போது அவர்களை மீட்க மருத்துவ குழு ஒன்று களமிறங்கியுள்ளது.

இந்த நிகழ்வு குறித்து பேசிய சீனாவின் மலேசிய தூதர் தடுக் நுஷிர்வான் ஆறு பேர் கொண்ட தூதரக அதிகாரிகள், வுஹனில் வசிக்கும் மலேசியர்களின் எண்ணிகையை கணக்கெடுத்து அவர்கள் அனைவரையும் மீட்க தனி குழு ஒன்று அங்கு விரைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சாலை மார்கமாக அந்த குழு செல்ல சுமார் 13 மணி நேரம் பிடிக்கும் என்றும், அவர்கள் அங்கு சென்ற பின்னர், முழு பட்டுயலும் சரிபார்க்கப்படும் என்றும் தூதர் தெரிவித்தார். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்ட பின்னர் எப்போது அவர்களை மலேசியா கொண்டுவர வேண்டும் என்பதை மலேசியா அரசு விரைவில் முடிவுசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.