இங்கிலாந்தில் பணியாற்றும் மலேசிய மருத்துவர் – கொரோனா தொற்றால் பலி : சோகத்தில் மூழ்கிய மருத்துவமனை

malaysia doctor

இங்கிலாந்தின் பர்மிங்காமின் மகளிர் மருத்துவமனையில் பணியாற்றி வந்த மலேஷிய நாட்டை சேர்ந்த மருத்துவர் டாக்டர் விஷ்ணா ரசியா கோவிட் -19 காரணமாக இறந்துள்ளார். இந்த தகவலை அந்த நகரில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அறக்கட்டளை தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. மலேசியாவை சேர்ந்த டாக்டர் விஷ்னா, அல்லது விஷ் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் அவர் Neonatal துறையை சேர்ந்த மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.

தற்போது நிலவி வரும் இந்த இக்கட்டான சூழலில் கொரோனா நோயாளிகளை கவனித்து வந்த அவருக்கும் சில நாட்களுக்கு முன்பு தொற்று ஏற்பட்டு அவர் இறந்துள்ளார். அவர் பணியாற்றிய மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் பியோனா ரெனால்ட்ஸ், டாக்டர் விஷ்னா ஒரு மிகச்சிறந்த மருத்துவர் என்றும் அவருடைய இழப்பு வேதனை அளிப்பதாகவும் கூறினார்.

உலக அளவில் 28 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா காரணமாக பதித்துள்ள நிலையில் இங்கிலாந்தில் மட்டும் சுமார் 19,000-க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.