‘உள்ளூர் தொழிலார்களை பணியில் அமர்த்த யோசிக்கும் மலேசிய வர்த்தகர்கள்..!!’ – காரணம் என்ன..?

kuala lumpur

கொரோனா காரணமாக, தற்போது நிலவும் இந்த இக்கட்டான சூழலில் பல தடங்கல்களை உலகின் அனைத்து நாடுகளும் சந்தித்து வருகின்றது. அதேபோல மலேசிய அரசும் பல இக்கட்டண சூழ்நிலைகளை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் கோலாலம்பூர் மொத்த விற்பனை சந்தையில் பிறநாட்டு தொழிலார்களை வேளைக்கு அமர்த்துவதற்கு பதிலாக உள்ளூர் தொழிலார்களை பயன்படுத்த மலேஷியா அரசு பரிந்துரை செய்தது.

ஆனால் உள்ளூர் தொழிலார்கள் சம்பளம் குறித்து பல கேள்விகள் கேட்பதாகவும், அவர்கள் செய்யும் வேலையை அவர்களே தேர்ந்தெடுக்க விரும்புவந்தாகவும் வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் உள்ளூர் தொழிலார்கள் மீது பெரிய அளவில் நாட்டத்தை தாங்கள் செலுத்தவில்லை என்றும் அவர்கள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அண்மைக் காலமாக மலேசியாவில் முறையான ஆதாரம் இல்லாமல் தங்கியிருக்கும் பிற நாட்டைச் சேர்ந்த தொழிலார்களை கைது செய்து வருகிறது மலேசிய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.