WHO-வின் மருத்துவத் திட்டம் – விரைவில் சோதனை நடத்தும் மலேசியா – நூர் ஹிஷாம் அப்துல்லா

WHO

உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தலின்படி உலக அளவில் கொரோனாவிற்கு எதிராக பரிசோதிக்கப்படும் மருத்துவ முறையை, மலேசியாவில் சோதனை வடிவில் சில நோயாளிகளுக்கு வழங்கி பரிசோதனை நடத்த உள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சக இயக்குனர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட அறிக்கையில், மலேசியா சிறந்த முறையில் கொரோனவை எதிர்த்து போராடி வருவதாகவும், சீனாவில் இருந்த வந்த அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

remdesivir, lopinavir / ritonavir, interferon beta, chloroquine and hydroxychloroquine போன்ற வெவ்வேறு மருந்துகளின் சேர்க்கைகளைப் பயன்படுத்த உள்ளதாகவும். இந்த மருத்துவ பரிசோதனைகளில் ஒன்பது அரசு மருத்துவமனைகள் பங்கேற்கின்றன என்றும் அவர் தெரிவித்தார். அதே சமயம் சோதனைகளுக்குத் தேவையான விதிமுறைகளை பூர்த்தி செய்யும் நோயாளிகளை ஏற்றுக்கொள்ள அந்த ஒன்பது மருத்துவமனைகளும் தயாராக உள்ளன என்றும் டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.

இந்த சோதனையின்போது வழங்கப்படும் மருந்துகளின் பயன்பாடு தேசிய மருந்து ஒழுங்குமுறை நிறுவனம், மருத்துவ ஆராய்ச்சி மற்றும் நெறிமுறைகள் குழு (எம்.ஆர்.இ.சி) அமைப்புகளால் மதிப்பீடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.