மலேசியாவிலும் களமிறங்கும் கொரோனா தடுப்பூசி!

COVID-19 vaccination

கடந்த சில நாட்களாக மலேசியாவில் தினமும் 1000-க்கும் அதிகமான அளவில் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது ஆசிய நாடுகளில் ஓரளவு கொரோனாவின் தாக்கம் மெல்ல குறைந்து வருகிறது. இருப்பினும் இன்னும் முழுமையாக கொரோனா முடிவடையவில்லை என்பதே நிதர்சனம்.

இந்நிலையில் மலேசியாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் பிரதமர் முகைதீன் யாசின் இந்த தடுப்பூசி போட்டுக்கொண்டு மக்களுக்கு நம்பிக்கை ஊட்டவிருக்கிறார்.

இதனையடுத்து முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள மக்கள் தொகையில் 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்றும், கொரோனாவுக்கு எதிராக செயல்படக்கூடியது என்றும் மருத்துவ ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

Malaysia expects to buy enough supplies to cover more than 80 per cent of its population.

இதேபோல் ஆஸ்ட்ரா செனகா நிறுவனத்தின் தடுப்பூசியை வாங்கவும் மலேசிய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

அதன்படி அந்நிறுவனத்திடமிருந்து 6.4 மில்லியன் டோஸ்கள் வாங்கப்படவுள்ளன. இது மொத்த மக்கள்தொகையில் 10 சதவீதம் பேருக்கு போடப்படும் என கூறப்படுகிறது.

இதேபோல் ஃபைசர் நிறுவனத்திடமிருந்து 12.8 மில்லியன் டோஸ்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக மலேசியா கொரோனா தடுப்பு 2.05 பில்லியன் ரிங்கிட் செலவு செய்ய திட்டமிட்டுள்ளாது.

மலேசியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரவிருப்பதாக வெளியான செய்தியால் அந்நாட்டு மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். முன்னதாக பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு போடப்பட்டுவருகிறது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram