மலேசியா – சிங்கப்பூர் : எல்லை கடந்த பயணத்திற்கு மக்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!

Khairul Dzaimee Daud
Picture Courtesy malay mail

ஜோஹோர் பரு, மலாய் தீபகற்பத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ள ஒரு நகரம், தற்போது சிங்கப்பூருக்கும் ஜோஹோர் பருவுக்கும் இடையே ரயில் இணைப்புத் திட்டம் தொடர்பான ஒரு ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு செய்ய இரு நாடுகளும் முயற்சித்துள்ளதாக மலேசிய போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் பல மாதங்களுக்கு முன்பு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வு குறித்து ஆண்டனி லோக் தனது முகப்புத்தகத்தில் அப்போது ஒரு பதிவினை அளித்தார். அந்த பதிவில், தாம் சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானைச் சந்தித்ததாகவும், அந்த சந்திப்பில் சிங்கப்பூருக்கும் ஜோஹோர் பருவுக்கும் இடையிலான ரயில் இணைப்புத் திட்டத்தின் முன்னேற்றத்தை பற்றியும் விவாதித்ததாக அவர் கூறினார். மேலும் தானும் அமைச்சர் கோ பூனும் பரிமாறிய கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் கடந்த வாரம் இந்த பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்துக்கு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் வரும் ஆகஸ்ட் 17ம் தேதி முதல் மீண்டும் எல்லைகள் திறக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் வெளியிட்டுள்ள அறிக்கையில் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் திரும்பும் பணியாளர்கள் 7 நாட்கள் தனித்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே 14 நாட்கள் என்ற அளவில் இருந்த இந்த தனிப்படுத்துதல் தற்போது 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குநர் கைருஸ் டாவுட் வெளியிட்டுள்ள அறிக்கையில் மலேஷியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான எல்லை கடந்த பயணத்திற்கு மக்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். வர்த்தகம் மற்றும் தொழில்சர்ந்த பயணங்களுக்கு மக்கள் RGL பயண முறையை பயன்படுத்தலாம் என்று அவர் தெரிவித்தார். RGL matrum PCA மூலமாக பயம் செய்ய விரும்பும் மக்கள் MTP எனப்படும் My Travel Pass தளத்தில் http://www.mtp.imi.gov.my பதிவு செய்யலாம்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms