“தாய்மொழிப் பள்ளிகளை மூடவேண்டும்.?” – கண்டனம் தெரிவிக்கும் தமிழ் அமைப்புகள்.!

Tamil Schools Malaysia
Image Courtesy malaysiaindru.my

மலேசியாவில் தாய் மொழி வழி பள்ளிகளை மூட வேண்டும் என்று கூறிய மலேசிய இன்சான் பெகா-வை சேர்ந்த ஒருவருக்கு தமிழ் அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. (Malaysia Tamil School)

UNESCO-வின் பரிந்துரைப்படி தொடக்கப்பள்ளியை குழந்தைகள் தாய் மொழியில் கற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. (Malaysia Tamil School)

“தலைநகர் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் தடை நீடிக்கும்” – பாதுகாப்பு அமைச்சர்.!

ஆனால் அதனை மீறி இன்சான் பெகா-வை சேர்ந்த அந்த நபர் அவ்வாறு கூறியது கண்டிக்கத்தக்கது என்று மலேசிய அமைப்புகள் தெரிவிப்பதாக மலேசியா இன்று செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

மலேசியாவை பொறுத்தவரை தமிழர்களின் பாரம்பரியம் என்பது 200 ஆண்டுகள் கண்டது நிற்கும் ஒன்று. தோட்டத்தொழில் அவர்கள் பங்கு அதிகம்.

இந்நிலையில் வரவிருக்கும் 2021ம் ஆண்டிற்கான பட்ஜெட், கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. பெரிக்காத்தான் நேஷனல் அரசின் தலைமையில் இந்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டது.

அப்போது இந்த பட்ஜெட் அறிவிப்பு குறித்து ஒரு முக்கிய கேள்வியை முன்வைத்தார் பத்துகாஜா பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்.

திரு. சிவகுமார் அவர்கள் அப்போது வெளியிட்ட அறிக்கையில். அறிவிக்கப்பட்டுள்ள பட்ஜெட்டில் தமிழ் மற்றும் சீன பள்ளிகளுக்கான தனிப்பட்ட பட்ஜெட் அறிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்நிலையில் அந்த நிதி ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram