“மலேசிய சிங்கப்பூர் எல்லை விரைவில் திறக்கப்பட வேண்டும்” – வர்த்தகர்கள்..!

Johor and Singapore
Image Courtesy The Star

மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான (Singapore Border) எல்லையை விரையில் திறக்க வேண்டும் என்று வர்த்தகர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இரு நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்துக்கு கொரோனா காரணமாக (Singapore Border) நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி முதல் மீண்டும் எல்லைகள் திறக்கப்பட்டன.

இதையும் படிங்க : “கோவிட் 19 பரிசோதனை கட்டணத்தை குறைக்க வேண்டும்”

ஆனால் வர்த்தகர்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய எல்லைகள் திறக்கப்பட வேண்டும் என்றும் தற்போது கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜொகூர் பகுதி மக்கள் அரசிடம் இந்த கோரிக்கையை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் சில தினங்களுக்கு முன்பு ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் திரும்பும் பணியாளர்கள் 7 நாட்கள் தனித்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் விரைவில் இரு நாடுகளில் இருந்து தொழில் ரீதியாக ஊழியர்கள் பயணம் செய்ய ஆவணம் செய்யப்படும் என்றும் மலேசியா பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மலேசியாவிற்கான சிங்கப்பூர் நாட்டின் தூதர் வேணுகோபால மேனன் அவர்கள் புத்ராஜெயாவில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் தன்னை சந்தித்து இது குறித்து பேசியதாக அவர் தெரிவித்தார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram