‘100,000 டன் அரிசி இறக்குமதி’ : ‘இந்தியாவுடன் அரிசி ஒப்பந்தத்தை பதிவு செய்தது மலேசியா..!!’

rice deal with india

ஓர் மாபெரும் இடைவெளிக்கு பின்னர், மலேசியா மற்றும் இந்திய ஆகிய இரு நாடுகளுக்கு மத்தியில் வர்த்தக உறவை மேம்படுத்துவதற்கான மேலதிக அடையாளமாக, மலேசியா இந்த மாதத்திலும், அடுத்த மாதத்திலும் இந்தியாவில் இருந்து சுமார் 100,000 டன் அரிசியை இறக்குமதி செய்ய ஒப்புக் கொண்டுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது..

இந்த ஆண்டு நடக்கவிருக்கும் இந்த இறக்குமதி கடந்த ஐந்து வருடங்களில் மலேசியா மற்றும் இந்தியாவிற்கு இடையே நடந்த வர்த்தகத்தை விட இரு மடங்கு அதிகம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் மியான்மர், வியட்நாம் மற்றும் கம்போடியா போன்ற நாடுகள் உள்நாட்டு பயன்பாட்டிற்கு தானியங்களை சேமிக்க ஏற்றுமதியில் தற்காலிக தடைகளை விதித்துள்ள நிலையில் மலேசியவின் இந்த முடிவு பெரிய திருப்புமுனையாக பார்க்கப்படுகின்றது.

“நீண்ட காலத்திற்குப் பிறகு, மலேசியா இந்தியாவில் இருந்து கணிசமான அளவு கொள்முதல் செய்து வருகிறது” என்று இந்தியாவின் அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.வி.கிருஷ்ண ராவ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.