“மலேசியாவில் அனைத்து பள்ளிகளையும் மூட வேண்டும்” – ஆசிரியர்கள் சங்கம்.!

Malaysia Schools
Picture Courtesy Free Malaysia Today

மலேசியாவில் உள்ள பச்சை மண்டலங்களில் உள்ள பள்ளிகளையும் (Malaysia Schools) மூட அரசு உத்தரவிட வேண்டும் என்றும் தேசிய ஆசிரியர்களுக்கான நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது மலேசியாவை கொரோனாவின் மூன்றாம் அலை தாக்கியுள்ளது. தினமும் 600-க்கும் அதிகமான மக்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு (Malaysia Schools) வருகின்றனர்.

இந்த இக்கட்டான சூழலில் ஏற்கனவே சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட இடங்களில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

“வந்தே பாரத் சிறப்பு விமானம்”

தற்போது ஆசிரியர்கள் மட்டும் மாணவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க பச்சை மண்டலங்களில் உள்ள பள்ளிகளையும் மூட அரசு உத்தரவிட வேண்டும் என்று தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

கொரோனா அச்சத்தால் பல பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை என்று அச்சங்கத்தின் தலைவர் அமிருடின் அவாங் ,தெரிவித்தார்.

தற்போது இணைய வழி கல்வி அமலில் உள்ளதால், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மலேசியாவில் தினமும் தெற்றின் அளவு உயர்ந்து வருகின்றது. ஆனால் அதே சமயம் தினமும் கொரோனாவில் இருந்து மீண்டு வருவோருடைய அளவும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் நேற்று ஒரே நாளில் மீண்டும் அதிக உச்சமாக மலேசியாவில் கொரோனா காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை மலேசியாவில் 246 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram