சரவாக், குச்சிங் உள்ளிட்ட சில பகுதிகளை தவிர பிற பகுதிகளில் இன்று முதல் மீண்டும் பள்ளிகள் படிப்படியாக திறக்க தொடங்கியுள்ளன. (Malaysia Schools Opened)
முதற்கட்டமாக, பாலர் பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் மற்றும் இரண்டாம் படிவ மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. (Malaysia Schools Opened)
திருச்சி – கோலாலம்பூர் : “மார்ச் மாதத்திற்கான முதல் விமானம் இன்று புறப்பட்டது”.!
இன்டெர்நேஷனல் பள்ளிகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் வரும் மார்ச் 8ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் அண்மையில் கொரோனா தொற்று மீண்டும் தலைதூக்கிய காரணத்தால் பள்ளிகள் ஜனவரி மாதம் வரை புடுத்தலில் இருந்தது.
மலேசியாவின் கல்வி அமைச்சர் (Education Minister) டாக்டர் திரு. ராட்ஸி ஜிடின் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்தார்.
கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 74 விழுக்காடு பள்ளிகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது கிளந்தான், சரவாக் போன்ற பகுதிகளில் மட்டும் தொற்று இல்லாத மாநிலங்களாக திகழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது அங்கு பள்ளிகளிலும் தொற்று ஏதும் கண்டறியப்படவில்லை.
இந்த சூழ்நிலையில் நாடுமுழுவதும் உள்ள கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளை மூட அப்போது முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது தொற்றின் அளவு சற்று குறைந்து வருவதால், மீண்டும் பள்ளிகளை படிப்படியாக திறக்க தொடங்கியுள்ளது அரசு.
மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
* Telegram