“கல்வி நிறுவனங்களை திறக்க முயற்சிக்க வேண்டும்” – எம்.பி. லிம் கிட் சியாங்

Malaysi School News
Image tweeted by Lim Kit Siang

மலேசியாவில் வெகுநாட்கள் பள்ளிகள், மற்றும் கல்லூரிகளை மூடுவதில்லை பயனில்லை என்று எம்.பி. லிம் கிட் சியாங் கருத்து தெரிவித்துள்ளார். (Malaysia School News)

மலேசியாவில் மீண்டும் கொரோனா தொற்று தலைதூக்கி இருப்பதால் கடந்த 9ம் தேதி தொடங்கி இந்த கல்வியாண்டின் இறுதி நாள்வரை பள்ளிகளை மூட கல்வி அமைச்சகம் உத்தரவிட்டது. (Malaysia School News)

“வீட்டுக்கு இருவர் மட்டுமே அனுமதி” – தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டுகோள்.”

மலேசியாவின் கல்வி அமைச்சர் (Education Minister) டாக்டர் திரு. ராட்ஸி ஜிடின் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்தார்.

கிளந்தான், சரவாக் போன்ற பகுதிகளில் மட்டும் தற்போது தொற்று இல்லாத மாநிலங்களாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. அங்கு பள்ளிகளிலும் தொற்று ஏதும் கண்டறியப்படவில்லை.

இந்த சூழ்நிலையில் நாடுமுழுவதும் உள்ள கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளை மூட தற்போது முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் இந்த முடிவு முழுமையான தீர்வினை தராது என்று லிம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் ஆரம்ப நிலையில் நம்மால் நிலைமையை கணிக்கமுடியாமல் இருந்தது.

ஆனால் இப்போது சுகாதார நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும் அளவிற்கு இந்த வைரஸ் குறித்த நாம் கண்டறிந்துள்ளோம்.

2022 வரை இந்த நோயின் தாக்கம் இருக்கும் என்று நம்பப்படுவதால் மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் 2022 வரை கல்வி நிலையங்களை மூடி வைப்பது என்பது சாத்தியமில்லாத விஷயம் என்றும் எம்.பி லிம் தெரிவித்தார்.

ஆகவே பள்ளி, கல்லுரிகளை பகுதி நேரமாக பயன்படுத்தவும். சிறிய அளவிலான வகுப்புகள் அல்லது மாற்று வாரங்களில் வகுப்புகள் நடத்த ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். (Malaysi School News)

பள்ளி கல்லூரிகள் மூடப்படுவதால் பொருளாதார சிக்கலும் ஏற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் கல்வி சார்ந்த தன்னார்வல நிறுவனங்கள் மற்றும் பெற்றோர்களை அழைத்து கருத்து கேட்கும் கூட்டம் நடத்தவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram