“நாட்டில் முழுமையாக நடமாட்டக்கட்டுப்பாட்டிற்கு அவசியம் இருக்காது?” – பிரதமர்.

PKP Malaysia
Image tweeted by muhyiddin yassin

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தற்போது அமல்படுத்தப்பட்டிருப்பதால் நாடு முழுமைக்கும் கட்டுப்பாடு விதிக்க அவசியம் இல்லை. (Malaysia PKP)

இந்த தகவலை மலேசிய பிரதமர் முஹிதீன் யாசின் நேற்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (Malaysia PKP)

“ஆவனமற்ற அந்நியர்களுக்கு பொதுமன்னிப்பு குறித்து பேச்சுவார்த்தை” – அமைச்சர் கைரி.!

கொரோனா தடுப்பு நடவடிக்கை நாட்டில் தற்போது முழுவீச்சில் நடந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் தொற்று திரளை அதிகம் காணப்படும் பகுதிகளில் மட்டுமே நடமாட்டக்கட்டுப்பாடு அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

நேற்று கோலாலம்பூர், கிளந்தான் உள்ளிட்ட சில பகுதிகளில் மீண்டும் நடமாட்டக்கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுஒருபுரம் இருக்க மலேசியாவில் இதுவரை 3,60,000 பேருக்கு கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸ் போடப்பட்டுள்ளது என்றார் ஆதம் பாபா.

நேற்று மலேசியாவில் புதிதாக 1219 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயம் 1000-க்கும் அதிகமானோர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.

தற்போது மலேசியாவில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி முழுவீச்சில் தொடங்கி நடந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்களப்பணியாளர்கள் 5 லட்சம் பேரின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது.

அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் சுமார் 32 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram