“வணிகர்கள் பிரிஹாத்தின்” – விண்ணப்பம் செய்ய நிதியமைச்சர் அழைப்பு.!

Malaysia Merchants
Image Courtesy BERNAMA

மலேசியாவில் வணிகர்களுக்கு சிறப்பு நிதி உதவி வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. (Malaysia Merchants)

உலகெங்கும் கடந்த ஓர் ஆண்டினை கடந்து, தொடர்ந்து பரவி வருகின்றது கொரோனா. இன்றளவும் மக்கள் தங்களுடைய சகஜ வாழ்விற்கு திரும்ப முடியாமல் உள்ளனர். (Malaysia Merchants)

“இலவச கொரோனா பரிசோதனை முகாம்” – சிலாங்கூர் கொரோனா பணிக்குழு.!

அதே போல இந்த கொரோனா காலகட்டத்தில் உலக அளவில் பல தொழில்கள் நலிவடைந்து உள்ளது. சுற்றுலாவை நம்பியே உள்ள பல நாடுகள் பெரும் பொருளாதார இழப்பை கண்டுள்ளது.

இந்த சூழலில் மலேசியாவில் உள்ள வணிகர்களும் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். அன்றாட வருமானத்தை மட்டுமே நம்பியுள்ளார் பெரும் அவதிப்படுகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டுள்ள மலேசிய அரசு “வணிகர்கள் பிரிஹாத்தின்” என்று அழைக்கப்படும் புதிய நிதி உதவி திட்டத்தை கொண்டுவந்துள்ளது.

தற்போது இதற்கான விண்ணப்பங்கள் அரசால் வழங்கப்பட்டு வருகின்றது. கொரோனா காலகட்டத்தில் பெரும் இழப்பை சந்தித்து வரும் வணிகர்கள் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மலேசிய நிதியமைச்சர் டத்தோ-ஸ்ரீ தெங்கு ஸஃப்ருல் அஸிஸ் அவர்கள் இதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளார். (Malaysia Merchants)

இந்த நிதி உதவி பெற இம்மாதம் 7ம் தேதி தொடங்கி டிசம்பர் 21 2020-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒரே நேரத்தில் 3000 வெள்ளிவரை இந்த நிதி உதவி திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram