“மாநிலம் மட்டும் மாவட்டம் இடையேயான போக்குவரத்துக்கு தடை விதிக்க வாய்ப்பு.”

Malaysia MCO
Image Tweeted by Dr. Adham Baba

கொரோனா தொற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மலேசியாவில் மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பயணம் தடைசெய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. (Malaysia MCO)

இந்த தகவலை மலேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ஆதம் பாபா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். கொரோனா வேகம் அதிகமாக உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். (Malaysia MCO)

பின்னாங் மற்றும் சிலாங்கூர் – “இவ்வாண்டு தைப்பூசக் கொண்டாட்டங்கள் இல்லை.?”

இருப்பினும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக மலேசியாவில் கொரோனாவின் தாக்கம் 2000 என்ற அளவை தாண்டி வருவது மக்களை கவலையுற செய்துள்ளது.

உலக அளவில் ஆசிய நாடுகளில் ஓரளவு கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கி உள்ளது. இருப்பினும் மலேசியாவில் கொரோனா தொற்று சற்று அதிகமாகவே காணப்படுகிறது.

நேற்று உள்ளுரில் பாதிக்கப்பட்ட 2641 பேரில் 1086 பேர் சிலாங்கூர் பகுதியை சேர்ந்தவர்கள் 401 பேர் சபா பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று பகல் 12 மணி நிலவரப்படி புதிதாக உள்ளூரில் 2641 பேருக்கும் வெளிநாடுகளில் இருந்து மலேசியா திரும்பிய 2 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

மலேசியாவை பொறுத்தவரை இதுவரை கொரோனவால் பாதித்த மக்களை எண்ணிக்கை என்பது 1,31,108 என்ற மிகப்பெரிய அளவை தொட்டுள்ளது.

இதுஒருபுற இருக்க கொரோனாவின் மூன்றாம் அலையில் உள்ள மலேசியாவில் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 2643 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 68084 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram