“மீண்டும் லாக் டவுனுக்கு வாய்ப்பு” – கடைகளில் குவியும் மக்கள்.!

Malaysia Malls
Image Courtesy straitstimes.com

கொரோனா தொற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீண்டும் லாக் டவுன் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. (Malaysia Malls Lockdown)

இதனால் மலேசியாவின் பல பிரதான பகுதிகளில் உள்ள ஹைப்பர் மால்களில் மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது. (Malaysia Malls Lockdown)

இந்தியா to கோலாலம்பூர் : நான்கு நகரங்கள் – 16 சிறப்பு விமானங்கள்.!

மீண்டும் பொதுநடமாட்டக்கட்டுப்பாடு அறிவிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் அத்யாவசிய பொருட்களை வாங்கி கடைகளில் குவிய தொடங்கியுள்ளனர்.

மேலும் தைப்பூசம், பொங்கல் போன்ற பண்டிகைகள் அண்மையில் வரவிருப்பதால் இயல்பை விட மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

மலேசியாவில் மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பயணம் தடைசெய்யப்படலாம் என்ற தகவல் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவலை மலேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ஆதம் பாபா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். கொரோனா வேகம் அதிகமாக உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இருப்பினும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக மலேசியாவில் கொரோனாவின் தாக்கம் 2000 என்ற அளவை தாண்டி வருவது மக்களை கவலையுற செய்துள்ளது.

உலக அளவில் ஆசிய நாடுகளில் ஓரளவு கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கி உள்ளது.

இருப்பினும் மலேசியாவில் கொரோனா தொற்று சற்று அதிகமாகவே காணப்படுகிறது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram