“தலைநகர் உள்பட 6 மாநிலங்களில் மீண்டும் லாக் டவுன்” – மலேசிய பிரதமர்.!

Malaysia Lock Down 2.0
Image tweeted by Muhyiddin yassin

கடந்த சில நாட்களாகவே மலேசியாவில் 2000-க்கும் அதிக அளவில் தொற்று பரவி வருவதால் அங்கு மீண்டும் பொது நடமாட்டக்கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. (Malaysia Lock Down 2.0)

இதற்கான அறிவிப்பை மலேசிய பிரதமர் முஹிதீன் யாசின் அறிவித்தார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் இதனை தெரிவித்தார். (Malaysia Lock Down 2.0)

“2021-ல் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது” – நூர் ஹிஷாம் அப்துல்லா

தலைநகர் கோலாலம்பூர், லபுவான் மற்றும் புத்ராஜெயா ஆகிய இடங்களிலும், சபா, சிலாங்கூர், மலாக்கா, ஜோஹோர் மற்றும் பின்னாங் ஆகிய மாநிலங்களிலும் லாக் டவுன் விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பேசுகையில், நாட்டில் பல இடங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஆகையால் மீண்டும் குறிப்பிட்ட இடங்களில் பொது நடமாட்டக்கட்டுப்பாடு அமலாகிறது என்றார்.

சிலாங்கூர், ஜோஹோர் மற்றும் கோலாலம்பூர் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் தொற்று காணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

லாக் டவுன் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பொது நிகழ்ச்சிகள் நடக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் இந்த லாக்டவுன் 14 நாட்கள் நீடிக்கும் என்றார் பிரதமர்.

மேலும் திரங்கனு, கிள்ந்தான் போன்ற பகுதிகளில் நிபந்தனைக்கு உட்பட்ட கட்டுப்பாடு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மலேசியாவில் புதிதாக 2226 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது குறிப்படத்தக்கது. மேலும் நேற்று ஒரே நாளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

அதே போல நேற்று, மலேசியாவில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த 1006 பேர் குணமடைந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram