“மலேசியா, உங்கள் குப்பைகளை சுமக்கும் இடமல்ல” – அமைச்சர் காட்டம்   

plastic waste

உலகின் சில நாடுகள், பிற நாடுகளின் குப்பை கொட்டும் இடமாக மாறிவருவது வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது. போர்களை சந்தித்து நாடுகள் அழிந்த காலம் மாறி பிற நாடுகளின் குப்பைகிடங்குகளாக மாறி பல இன்னல்களை சந்தித்து வருகிறது சில நாடுகள்.

இந்நிலையில் தற்போது மலேசிய அரசும் இந்த குப்பை சசிக்கலுக்கு ஆளாகியுள்ளது, இதுகுறித்து மலேசிய நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் இயோ பீ கூறுகையில் உங்கள் குப்பைகளை கொட்ட எங்கள் நாடு குப்பை தொட்டி அல்ல என்று மிகவும் ஆவேசமாக பேசியுள்ளார்.

அண்மையில் சீனா அரசு நெகிழி கழிவுகளை இறக்குமதி செய்ய தடை விதித்ததில் இருந்து குப்பைகளை கப்பல் மூலம் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது என்றும் இதனால் மலேசிய நாடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இந்த அவலநிலையை கண்டு நாங்கள் அஞ்ச போவதில்லை என்று கூறிய அமைச்சர் இந்த குப்பைகளை திருப்பி அனுப்பும் நடவடிக்கை ஏற்கனவே தொடங்கி விட்டது என்று கூறினார்.

மலேசியா கடந்த ஆண்டு சுமார் 150 கண்டைனர்கள் நெகிழி கழிவுகளை 13 முக்கிய பணக்கார நாடுகளுக்கு திரும்ப அனுபியுள்ளதாக தெரிவித்தார், மேலும் 110 கண்டைனர்கள் கொண்ட நெகிழி கழிவுகள் இந்த ஆண்டே அந்த அந்த நாடுகளுக்கு திரும்ப அனுப்படும் அன்று காட்டமாக கூறினார்.

இது போல சுமார் 3737 கண்டைனர்கள் கொண்ட குப்பைகள் உறிய நாட்டிற்கே திரும்ப அனுப்ப திட்டம் வகுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.