“இந்த இக்கட்டான சூழலில் மலேசியாவில் தேர்தல் வேண்டாம்.?” – நூர் ஹிஷாம் அப்துல்லா.!

Malaysia Election
Image tweeted by noor hisham abdulla

சில தினங்களுக்கு முன்பு சபா பகுதியில் தேர்தல் நடைபெற்றது. (Malaysia Election) அந்த தேர்தல் சபா மற்றும் பிற பகுதிகளில் தொற்று பரவ ஒரு ஆரம்ப புள்ளியாக இருந்தது என்று நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனாவின் மூன்றாம் அலை மலேசியாவில் (Malaysia Election) நிலவி வருவதால், இந்த சூழ்நிலையில் தேர்தலை தவிர்ப்பதே நல்லது என்று அவர் குறிப்பிட்டார்.

“இழப்பை சந்திக்கும் சுற்றுலாத்துறை ஊழியர்கள்”

தற்போது இயக்கக்கட்டுப்பாடு அமலில் உள்ளது என்றபோதும் மக்களை அதனை எவ்வாறு கடைபிடிக்கிறார்கள் என்பதே முக்கியம் என்று அப்துல்லா தெரிவித்தார்.

சபா பகுதியில் நடந்த தேர்தலில் இருந்து மலேசியா பெரிய அளவில் பாடம் கற்றுள்ளது. அதனால் அதனை நினைவில் கொண்டு செயல்பட ஆயத்தமாகி உள்ளது மலேசியா என்றார் அவர்.

ஆனால் தேர்தல் நடத்தியே ஆகா வேண்டும் என்ற பட்சத்தில் மலேசியாவில் தேர்தல் நடத்துவது குறித்து நிச்சயம் ஆலோசனை நடந்த வேண்டும்.

கொரோனா காரணமாக உலக அளவில் அனைத்து நாடுகளிலும் பல வித நிகழ்வுகள் தடைப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவ தொடங்கியது அந்த ஒற்றை தொற்று. கடந்த 11 மாதங்களாக உலக நாடுகளையே தவிக்கவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram