“பின்னாங் பகுதியில் மலேசியா தின கொண்டாட்டங்கள் நடைபெறாது” – மாநில அரசு தகவல்..!

Malaysia Day
Image Courtesy FMT News

எங்கள் நாட்டில் சூரியன் மறைவதில்லை..!, என்று பெருமிதத்தோடு பல நூறு ஆண்டுகளாககூறிவந்த நாடு தான் இன்றைய லண்டன் நகரமான அன்றைய கால பிரிட்டீஷ் நாடு.

உலகில் வியாபார ரீதியாக நுழைந்த அந்நாட்டினர் பின்னர் அந்த நாடுகளை தங்களுடைய ஆட்சிக்கு உள்படுத்தினார்கள்.

பூமி பந்தில் 3ல் ஒரு பங்கை தங்களது வசம் வைத்திருந்தால் தான் தங்கள் நாட்டில் சூரியன் எப்போதும் மறைவதில்லை என்று அவர்கள் கூற காரணம்.

இதையும் படிங்க : “இந்தியா வருவோர்க்கு Institutional Quarantine-ல் இருந்து விலக்கு வேண்டுமா..?” – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.!

பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் அண்டை நாடான இந்தியா 200 ஆண்டுகால அடிமைக்கு பிறகு 1947ம் ஆண்டு தங்களுடைய விடுதலையை பெற்ற நிலையில் இயற்கை எழில் கொஞ்சம் நமது மலேசிய நாடு கடந்த 1957ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி தனது சுதந்திரத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மலேசிய டே எனப்படும் மலேசிய தினம் நாடெங்கும் செப்டம்பர் மாதம் 16ம் தேதி கொண்டாப்பட உள்ளது.

ஆனால் தற்போது கெடா மட்டும் சபா பகுதிகளில் மீண்டும் உள்ளூர் தொற்று அதிகமெடுத்து வரும் நிலையில் தற்போது பின்னாங் பகுதியில் மலேசிய தின கொண்டாடட்டங்கள் இருக்காது என்று மாநில அரசு அதிகாரப்பூர்வ நிகழ்வுகளின் தலைவர் Datuk லா சூ கிஅங் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் மக்கள் தேவை இன்றி பொது இடங்களில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கொரோனா பரவளின் வேகம் கடந்த 3 மாதங்களாக கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது மீண்டும் வேகமெடுத்துள்ளது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram