“அசுர வேகத்தில் கொரோனாவின் மூன்றாம் அலை” – ஒரே நாளில் 957-க்கு தொற்று.!

Malaysia Covid 19
Image tweeted by Noor Hisham Abdullah

மலேசியாவில் கொரோனாவின் (Malaysia Covid 19) மூன்றாம் அலை, தனது கோரத்தாண்டவத்தை ஆடி வருகின்றது. நேற்று ஒரே நாளில் 957 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

இதுவரை இல்லாத அளவில் மலேசியாவில் 900-க்கும் அதிகமான நபர்கள் மலேசியாவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. (Malaysia Covid 19)

அதிகபட்சமாக சபா பகுதியில் 658 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலாங்கூர் பகுதியில் தற்போது கொரோனா வேகமெடுக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிலாங்கூர் பகுதியில் 112 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக அளவு பாதிப்பு ஒருபுறம் இருக்க நேற்று மலேசியாவில் ஆறுதல் அளிக்கும் ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது.

இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 972 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். நேற்றைய பாதிப்பு எண்ணிக்கையைவிட மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

“சுயதொழில் செய்வோருக்கு சிறப்புச் சலுகை”

இந்த இக்கட்டான சூழலில் நிஜ வாழ்வில் சூப்பர் ஹீரோக்களாக மாறியுள்ள மருத்துவர்களின் அயராத பணியாள் நேற்று மலேசியாவில் கொரோனா காரணமாக யாரும் இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் தங்கள் ஒத்துழைப்பை அரசுக்கு அளித்ததால் நிச்சயம் கொரோனவை விரைவில் அழித்து சகஜ நிலைக்கு திரும்ப முடியும் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சபா பகுதியை தொடர்ந்து கோலாலம்பூர், சிலாங்கூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இயக்கக்கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram