“மீண்டு வரும் மலேசியா” – அதிகரிக்கும் குணமடைவோர் எண்ணிக்கை.!

Malaysia Covid 19 Update
Picture Courtesy vaitor.com

மலேசியாவில் தற்போது கடந்த சில வாரங்களாக கொரோனாவின் மூன்றாம் அலை தற்போது வீசி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. Malaysia Covid 19 Update

இந்த இக்கட்டான சூழலில் ஒரு நற்செய்தியாக தற்போது மலேசியாவில் குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

2000 ஊழியர்கள் வேலையிழப்பு..?

நேற்று மலேசியாவில் மேலும் 834 பேர் கொரோனா காரணமாக பாதித்திருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 900 பேர் குணமடைந்துள்ளனர் எனது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் தற்போது கோலாலம்பூர், சபா உள்ளிட்ட பல பகுதிகளில் இயக்கக்கட்டுப்பாடு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் சபா பகுதியில் தான் நேற்றும் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சபாவில் 503 பேரும் (Malaysia Covid 19 Update) அதற்கு அடுத்தபடியாக சிலாங்கூர் பகுதியில் 129 பேரும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவிற்கு தற்போது உலக அளவில் தடுப்பு மருந்து கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

நேற்று கொரோனா காரணமாக இரண்டு பேர் இறந்துள்ள நிலையில், இதுவரை கொரோனாவிற்கு மலேசியாவில் 251 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விரைவில் இந்த கொரோனாவின் மூன்றாம் அலை முடிந்து மலேசியா சகஜ நிலைக்கு திரும்பும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram