“தொடர்ந்து 2000ஐ தாண்டும் தொற்று எண்ணிக்கை” – சிவப்பு மண்டலமாகும் பகுதிகள்.!

Corona Update Malaysia
Image Tweeted by Noor Hisham Abdullah

கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக மலேசியாவில் கொரோனாவின் தாக்கம் 2000 என்ற அளவை தாண்டி வருவது மக்களை கவலையுற செய்துள்ளது. (Corona Update Malaysia)

உலக அளவில் ஆசிய நாடுகளில் ஓரளவு கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கி உள்ளது. இருப்பினும் மலேசியாவில் கொரோனா தொற்று சற்று அதிகமாகவே காணப்படுகிறது. (Corona Update Malaysia)

“கொச்சி முதல் கோலாலம்பூர் வரை” – அனைத்து வியாழக்கிழமைகளில் சேவை.?

தற்போது மலேசியாவில் கொரோனாவின் மூன்றாம் அலை அமலில் உள்ளது. மேலும் கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் ஒரு உச்சம் தொட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே 1000-க்கும் அதிக அளவிலேயே தொற்று எண்னிக்கை பதிவானது. ஆனால் கடந்த 3 நாட்களாக 2000-க்கும் அதிகமான மக்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று உள்ளுரில் பாதிக்கப்பட்ட 2286 பேரில் 638 பேர் சிலாங்கூர் பகுதியை சேர்ந்தவர்கள் 580 பேர் ஜோஹோர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று பகல் 12 மணி நிலவரப்படி புதிதாக உள்ளூரில் 2286 பேருக்கும் வெளிநாடுகளில் இருந்து மலேசியா திரும்பிய 9 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

மலேசியாவை பொறுத்தவரை இதுவரை கொரோனவால் பாதித்த மக்களை எண்ணிக்கை என்பது 2295 என்ற மிகப்பெரிய அளவை தொட்டுள்ளது.

இதுஒருபுற இருக்க கொரோனாவின் மூன்றாம் அலையில் உள்ள மலேசியாவில் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 3321 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 68084 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஆரம்ப நிலையில் மலேசியாவில் Sabah மற்றும் Kedah பகுதியில் தான் அதிக அளவில் தொற்று காணப்பட்டது. இந்நிலையில் கெடா பகுதியில் தற்போது தொற்றின் அளவு குறைந்துள்ளது.

மேலும் மக்கள் SOP-க்களை முறையாக கடைபிடிப்பது மட்டுமே சிறந்த தீர்வாக இருக்கும் என்பது பலரின் கருத்து.

நேற்று மட்டும் மலேசியாவில் 9 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இதுவரை 483 பேர் கொரோனா காரணமாக மரணித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram