“இவ்வாண்டு மட்டும் 108 கொரோனா மரணங்கள்” – நூர் ஹிஷாம் அப்துல்லா.!

Corona Vaccine Doses
Image Tweeted by BERNAMA

நேற்று மலேசியாவில் புதிதாக 15 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளது பலரை கவலைக்குள்ளாகியுள்ளது. மேலும் 195 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். (Malaysia Corona Death)

15 மரணங்களில் இருவர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 2021ம் ஆண்டில் மரணங்கள் அதிகரித்துள்ளது என்று நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். (Malaysia Corona Death)

இந்தியா – கோலாலம்பூர் : இன்று புறப்படும் சிறப்பு ஏர் இந்திய எக்ஸ்பிரஸ்

கொரோனாவின் மூன்றாம் அலையில் SOP-ஈக்கள் மலேசியாவில் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்றின் அளவு என்பது மிகவும் அதிகமாகவே உள்ளது.

மலேசிய மாமன்னர் சில தினங்களுக்கு முன்பு நாட்டில் அவரச நிலையை பிரகடன படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தலைநகர் கோலாலம்பூர் உள்ளிட்ட 6 மாநிலங்களில் முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் தொற்றின் அளவு குறையவில்லை.

நேற்று புதிய உச்சமாக மலேசியாவில் 3300-க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

“Kota Kinabalu” மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐவர் நேற்று உயிர் இழந்துள்ளனர். மேலும் நேற்று 9 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் மரணித்துள்ளனர்.

மலேசியாவில் நாளுக்கு நாள் தொற்றின் அளவு அதிகரித்து வரும் நிலையில் பல இடங்கள் சிவப்பு மண்டலமாக மீண்டும் மாறிவருகின்றன.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram