“3337” – மலேசியாவில் தொடர்ந்து புதிய உச்சத்தில் கொரோனா.!

Malaysia Corona 2021
Image Tweeted by KKMalaysia

தினம் ஒரு புதிய உச்சத்தினை கொரோனா மலேசியாவில் எடுத்து வருவது மிகவும் சோகத்தை அளிக்கிறது. இன்று மலேசியாவில் 3337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. (Malaysia Corona 2021)

இன்று பாதிக்கப்பட்ட 3337 பேரில் 1036 பேர் சிலாங்கூர் பகுதியை சேர்ந்தவர்கள் 460 பேர் ஜோஹோர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (Malaysia Corona 2021)

“கோலாலம்பூர் – திருச்சி” – தாயகம் சென்ற 340 பயணிகள்.!

இன்று பகல் 12 மணி நிலவரப்படி புதிதாக உள்ளூரில் 3337 பேருக்கும் வெளிநாடுகளில் இருந்து மலேசியா திரும்பிய சிலருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

மலேசியாவை பொறுத்தவரை இதுவரை கொரோனவால் பாதித்த மக்களை எண்ணிக்கை என்பது 1,47,855 என்ற மிகப்பெரிய அளவை தொட்டுள்ளது.

இதுஒருபுற இருக்க கொரோனாவின் மூன்றாம் அலையில் உள்ள மலேசியாவில் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

கெடா, மலாக்கா மற்றும் கிள்ளந்தான் போன்ற பகுதிகளிலும் பரவலாக தொற்று தொடர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

தலைநகர் கோலாலம்பூர் உள்ளிட்ட 6 மாநிலங்களில் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி வரை லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மலேசியா முழுமைக்கும் அவரசநிலை பிரகடன படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் கோலாலம்பூரில் இன்றும் 200-க்கும் அதிகமான அளவில் தொற்று பதிவாகி உள்ளது.

SOP-க்கள் கடுமையாக்கப்பட்டாலும் தொற்றின் அளவு தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருப்பது மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram