மலேசியாவில் விமான நிறுவனங்கள் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கின்றன – பொருளாதார அமைச்சர்

musthafa mohamed

உலகமே தற்போது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் இயங்கி வருகின்றது, உலக முழுக்கு உள்ள பல நாடுகளில் பல நகரங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. விமானங்கள் பறக்கவில்லை, பேருந்துகள் ஓடவில்லை, உலகம் தற்போது ஸ்தம்பித்துள்ளது என்றால் அது மிகையுமில்லை. இந்நிலையில் சிறு தொழில் முதல் பெரும் தொழில் செய்யும் பலரும் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மலேசியாவை பொறுத்தவரை இந்த கொரோனா காரணமாக பல இன்னல்களை சந்தித்து வருகின்றது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிரதமர் அறிவித்த பொருளாதார தூண்டுதல் தொகுப்பில் வினமா சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு எந்த சலுகையும் அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் அந்த தொழில் முனைவோருக்கு தொழில் சார்ந்த தொழிலார்களுக்கும் அவசர உதவி தேவை படுவதாக விமான நிறுவனங்கள் கூறுகின்றன.

ஆகவே அவர்களின் நிலையையும் கருத்தில்கொள்ள வேண்டும் என்று பலரும் கருது தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பேசிய பொருளாதார அமைச்சர் திரு. முஸ்தபா விமான நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் சவாலை எதிர்கொள்கின்றன என்று கூறினார்.