வுஹனில் நிவாரண பொருட்களுடன் தரையிறங்கிய மலேசிய விமானம்

Air Asia

வுஹான், உலகின் ஒட்டுமொத்த நாட்டினுடைய பார்வையும் தற்போது சீனாவில் உள்ள இந்த நகரின் மீது தான் உள்ளது. காரணம் அங்கு பிறப்பெடுத்த கொரோனா வைரஸ். மலேசிய உள்ளிட்ட இருபதிற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கும் இந்த நோய்க்கு இன்று வரை எந்த மருந்தும் கண்டறியப்படவில்லை.

ஆனால் தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் தற்போது இதற்க்கான தீர்வு ஒன்று கண்டரியப்படுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. காய்ச்சல் மற்றும் HIV நோய் தொற்றுக்கு பயன்படுத்தும் மருந்தினை கலந்து ஒரு மருந்து கண்டறிந்து உள்ளதாகவும் அதனை இந்த நோய்க்கு மருந்தாக பயன்படுத்தலாம் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிஜிங்கிள் உள்ள மலேசியா தூதர், வுஹன் நகரில் உள்ள மலேசியர்களை தாயகம் கொண்டுவர முடிவு செய்து அதற்கான செயலில் ஈடுபட்டதாக கூறினார். தற்போது வுஹன் நகரில் உள்ள 141 மலேசியர்களை தாயகம் அழைத்து வர ஏர் ஏசியா விமானம் சுமார் 500,000 ஜோடி கையுறைகளுடன் வுஹன் நகரில் தரையிறங்கி உள்ளது.

கொரோனா நோய் தொற்றால் பாதித்துள்ள சீனா மக்களுக்கு உதவும் வகையில் இந்த கையுறைகளை இந்த விமானத்தில் எடுத்து சென்றதாக தகவல்கள் தெரிவிகின்றன. விரைவில் வுஹன் நகரில் உள்ள மலேசியர்கள் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பர்க்கப்படுகிறது