“மலேசியாவில் டிசம்பர் 6 வரை கட்டுப்பாடு நீட்டிப்பு” – இஸ்மாயில் சபரி யாக்கோப்..!

PKPP in Perak
Picture Courtesy Astro Awani

மலேசியாவில் ஒருசில மாநிலங்களை தவிர பிற மாநிலங்களின் நாளை நவம்பர் 9ம் தேதி முதல் (Lockdown Malaysia) டிசம்பர் மாதம் 6ம் தேதி வரை நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக்கட்டுப்பாடு அமலில் இருக்கும்.

இந்த அறிவிப்பை மலேசியாவின் பாதுகாப்பு அமைச்சர் டத்தோ இஸ்மாயில் சபரி யாக்கோப் தெரிவித்துள்ளார். (Lockdown Malaysia)

“தமிழகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் மலேசிய பட்ஜெட்..?”

மலேசியாவின் கிளந்தான், பெர்லிஸ் மற்றும் பாஹாங் ஆகிய மாநிலங்களை தவிர பிற மாநிலங்களில் இந்த நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக்கட்டுப்பாடு அடுத்த மாதம் 6ம் தேதி வரை அமலில் இருக்கும்.

மலேசியாவில் ஏற்கனவே கோலாலம்பூர், புத்ரஜெயா, சபா, சிலாங்கூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நடமாடக்கட்டுப்பாடு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுப்பாடு அமலில் உள்ள காலத்தில் மாநிலங்கள் கடந்த பயணம் அனுமதிக்கப்படமாட்டாது. மேலும் அவசர தேவைக்கு போலீசாரிடம் அனுமதி பெற்று பயணம் செய்யலாம்.

மேலும் இந்த பகுதிகளில் உள்ள பள்ளிகள் மூடப்படுகின்றன. வீட்டில் இருந்து இருவர் மட்டுமே வீட்டை விட்டு வெளியேறி அத்யாவசிய பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுவர்.

சபா, கோலாலம்பூர், சிலாங்கூர் போன்ற பகுதிகளில் தினமும் அதிக அளவில் தொற்று அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சபா பகுதியில் தான் மலேசியாவிலேயே அதிகபட்சமான தொற்று தொடர்ந்து பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

நேற்று மலேசியாவில் 1168 பேர் கொரோனாவால் பாதித்த நிலையில், 1029 பேர் குணமடைந்துள்ளது நிம்மதி அளிக்கும் நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram