“பரவும் தொற்று” – மலேசியாவில் மேலும் நான்கு இடங்களில் லாக் டவுன்.!

PKPP in Perak
Picture Courtesy Astro Awani

நேற்றும் மலேசியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 3000 கடந்த நிலையில் மேலும் பல இடங்களில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. (Lock Down 2.0)

கிளந்தான், சரவாக் மற்றும் சிபு ஆகிய பகுதிகளில் இன்று முதல் மீண்டும் பொதுநடமாடக்கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. (Lock Down 2.0)

“இவ்வாண்டு மட்டும் 108 கொரோனா மரணங்கள்” – நூர் ஹிஷாம் அப்துல்லா.!

இதற்கான அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சரும் மலேசியாவின் மூத்த அமைச்சர்களில் ஒருவருமான இஸ்மாயில் சபரி யாக்கோப் தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட அறிவிப்பில் கிளந்தான் பகுதியில் இன்று தொடங்கி ஜனவரி 25 வரையில் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.

மேலும் சரவாக் மற்றும் சிபு ஆகிய பகுதிகளில் இன்று தொடங்கி ஜனவரி 29 வரை பொதுநடமாட்டக்கப்பட்டு விதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

நேற்று மலேசியாவில் மீண்டும் ஒரு உச்சமாக ஒரே நாளில் 3211 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தொடர்ந்து சிலாங்கூர் பகுதியில் தான் அதிக அளவில் தொற்று காணப்படுகிறது.

மேலும் மலேசியா முழுமைக்கும் அவரசநிலை பிரகடன படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் கோலாலம்பூரில் இன்றும் 200-க்கும் அதிகமான அளவில் தொற்று பதிவாகி உள்ளது.

SOP-க்கள் கடுமையாக்கப்பட்டாலும் தொற்றின் அளவு தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருப்பது மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram