தாய்லாந்தில் இருந்து வரும் ‘லேடெக்ஸ்’ – எல்லையை திறக்கும் மலேசியா

malaysia gloves

கொரோனா நோய் தொற்றால் மலேசிய அரசு பல நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில் மலேசிய நாட்டில் ரப்பர் கையுறைகள் உற்பத்தியை செறிவூட்ட ‘மரப்பால்’ இறக்குமதி செய்ய அனுமதிக்க அடுத்த வாரம் சோங்ஹ்லாவில் பதங் பெசார் சோதனைச் சாவடியை மீண்டும் திறக்க மலேசிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

பாங்காக் போஸ்ட் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் மலேசியாவில் கையுறையின் தேவை அதிகரித்து வரும் நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் சதாவோ மாவட்டத்தில் சோதனைச் சாவடியை மீண்டும் திறக்க மலேசிய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தாய்லாந்தின் ரப்பர் ஆணையத்தின் (RAOT) ஆளுநர் கஜோன்ஜாக் நுவான்ஃப்ரோம்சாகுல் தெரிவித்துள்ளார்.

கையுறைகளை தயாரிப்பில் உலகில் சிறந்து விளங்கும் மலேசியா ‘லேடெக்ஸ்’ விநியோகத்திற்கு தாய்லாந்து நாட்டை நம்பியுள்ளது. தற்போது மலேசியாவில் நிலவி வரும் பொது நடமாட்டக் கட்டுப்பட்டால் மலேசியாவின் பல எல்லைப்பகுதிகளும் பூட்டப்பட்டு கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கையுறைகள் தயாரிக்க தாய்லாந்து நாட்டில் இருந்து வரும் இந்த வரவு மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.