“கெடா ஹிந்து ஆலயத்திற்கு மாற்று நிலம்?” – சுங்கைபட்டாணி நகராண்மைக் கழகம்

Land for Hindu Temple
Photo Courtesy Tamil malar

மலேசியாவில் கொரோனா காலகட்டத்தில் ஏற்கனவே இரண்டு ஹிந்து கோவில்கள் இடிக்கப்பட்ட நிலையில் மூன்றாவதாக ஒரு கோவிலை இடிக்க அண்மையில் திட்டமிடப்பட்டது. (Land for Hindu Temple)

அலோர் ஸ்டாரில் உள்ள பழமையான கோவில் ஒன்றும் அதனை தொடர்ந்து கூலிமில் ஓர் கோவிலையும் கடந்த ஆண்டில் கெடா அரசு உடைத்தது. (Land for Hindu Temple)

சிலாங்கூரில் விரைவில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட தடுப்பூசி பணி தொடக்கம்.!

குறிப்பாக அரசு அல்லது தனியார் நிலங்களில் உள்ள கோவில்களை இடிக்கவே அரசு முனைப்பு கட்டிவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிகழ்விற்காக தனது வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் பேராசிரியர் திரு, டாக்டர் பி.இராமசாமி அவர்கள்.

ஆனால் கெடா அரசு எப்போது இந்தியர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்று பெசாரின் இந்தியர்கள் பிரிவு அதிகாரியான குமரேசன் முன்பு தெரிவித்தார்.

ஹிந்து ஆலயங்கள் தொடர்பாக எழும் விவகாரங்களை தங்களுடைய பார்வைக்கு கொண்டுவர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் கெடா பகுதியில் உள்ள ஸ்ரீ நாகம்மா கோவிலுக்கு மாற்று இடம் (நிலம்) வழங்குவதற்கு சுங்கைபட்டாணி நகராண்மைக் கழகம் தற்போது உறுதிகூறியுள்ளது.

மலேசியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18ம் தேதி தொடங்கியது கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட இயக்க கட்டுப்பட்டு என்பது குறிப்பிடத்தக்கது, தொடங்கி ஓர் ஆண்டை கடந்துள்ளது.

மலேசியாவில் பெருமளவில் தொற்று பரவலை தடுக்க இது மிகவும் உறுதுணையாக இருந்தது என்று பல அறிஞர்கள் கூறினார்கள்.

மலேசியாவில் உள்ள 80-க்கும் அதிகமான தொற்று முற்றிலும் இல்லாத பச்சை மண்டலங்களில் உள்ள இந்து கோயில்கள் திறக்க அரசு அனுமதி அளித்தது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram