“சிவப்பு மண்டலமாகும் கூச்சிங்” – நவம்பர் 13 வரை பள்ளிகள் மூடப்படும்.!

Kuching Malaysia
School in Kuching Malaysia

மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள கூச்சிங் (Kuching Malaysia) பகுதியிலும் தொற்று காணப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அங்கு பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 15 நாட்களில் 50-க்கும் அதிகமானோர் (Kuching Malaysia) பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பல இடங்கள் அங்கு சிவப்பு மண்டலமாக மாறிவருகின்றது.

“புலாவ் பெசார் தீவு தற்காலிமாக மூடப்படுகிறது”

இந்த நிகழ்வை தொடர்ந்து தற்போது கூச்சிங் பகுதியில் இன்று தொடங்கி வரும் நவம்பர் மாதம் 13ம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மூடப்படுகின்றன.

கூச்சிங் பகுதியில் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அனைத்து ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகள். மற்றும் ஆசிரியர் கல்வி நிறுவனங்கள்.

மெட்ரிக் கல்லூரிகள், அதனை தொடர்ந்து கல்வி அமைச்சகத்தின் பட்டியலில் பதிவுபெற்ற அனைத்து தனியார் பள்ளிகள் உள்ளிட்ட 200-க்கும் அதிகமான கல்விநிறுவனங்கள் மூடப்படுகின்றன.

விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் விரைந்து தங்களுடைய வீடுகளுக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலர் உதவியோடு அனுப்பிவைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வீட்டுக்கு செல்ல இயலாத மாணவர்களை பள்ளி விடுதியில் உள்ள வார்டங்கள் கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

அதே சமயம் சர்வதேச தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிடமிருந்து அனுமதி கடித்த பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று மலேசியாவில் 649 பேர் கொரோனா காரணமாக பாதித்துள்ளனர். அதே சமயம் நேற்று பாதிப்பு எண்ணிக்கையை விட கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மக்கள் ஒத்துழைத்தால் தொற்றை முழுமையாக குறைக்க முடியும் என்று சுகாதார அமைச்ச இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram